காழ்ப்புணர்ச்சியில் நிதியை நிறுத்தி வைத்த மத்திய அரசு
மோடி ஆட்சி மீண்டும் வந்தால் உரிமைகளை இழந்து விடுவோம், ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து கொண்டு இருக்கிறார்கள், மத்திய அரசு 20 ஆயிரம் கோடி ரூபாயை நிறுத்தி வைத்துள்ளது , நிறுத்தப்பட்ட நிதி வந்தால் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்திவிடுவோம் என்ற காழ்ப்புணர்ச்சியில் மத்திய அரசு நிதியை நிறுத்தி வைத்துள்ளது என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
Update: 2024-02-18 04:08 GMT
உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் , பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரைக் கூட்டம் பெருந்துறை அருகேயுள்ள சரளையில் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் , கயல்விழி செல்வராஜ் மற்றும் சிறப்பு அழைப்பாளராக கே.என்.நேரு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பரப்புரை கூட்டத்தில் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , மோடி ஆட்சி மீண்டும் வந்தால் உரிமைகளை இழந்து விடுவோம் , ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் , மத்திய அரசு 20 ஆயிரம் கோடி ரூபாயை நிறுத்தி வைத்துள்ளது என்றும் , நிறுத்தப்பட்ட நிதி வந்தால் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்திவிடுவோம் என்ற காழ்ப்புணர்ச்சியில் மத்திய அரசு நிதியை நிறுத்தி வைத்துள்ளது என்றார்.