கோவிலுக்குச் சென்ற மூதாட்டியின் செயின் பறிப்பு

கரூர் மாவட்டம் ஆண்டாள் கோவில் கிழக்கு,ஆண்டாள் கோவிலுக்கு சென்ற மூதாட்டியின் கழுத்தில் இருந்து ஏழரை பவுன் தங்கச் செயின் பறித்துச் சென்றவர்களை தேடி வருகின்றனர்;

Update: 2023-12-31 01:35 GMT

கோவிலுக்குச் சென்ற மூதாட்டியின் செயின் பறிப்பு

கரூர் மாவட்டம் ஆண்டாள் கோவில் கிழக்கு,ஆண்டாள் கோவில் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி செல்லம்மாள் வயது 69. இவர் அருகில் உள்ள ரெயின்போ நகர் பகுதியில் உள்ள அப்பார்ட்மென்ட் அருகே டிசம்பர் 29ஆம் தேதி மாலை 4:30 மணி அளவில் கோவிலுக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எது திசையில் டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத இருவர் நடந்து சென்ற செல்லம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த ஏழரைப்பவன் தங்கச்சியினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் டூவீலரில் தப்பி சென்றனர்.

Advertisement

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்லம்மாள் இது குறித்து கரூர் காவல் நிலையத்துக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தங்கச் செயினை பறித்துச் சென்ற மர்மநபர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? அவர்கள் ஓட்டி வந்த வாகனம் எத்தகைய வாகனம்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags:    

Similar News