அறிவுசார் மையத்தை திறந்து வைத்த முதல்வர்

குமாரபாளையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அறிவுசார் மையத்தை திறந்து வைத்தார்.;

Update: 2024-01-06 09:41 GMT

அறிவுசார் மையத்தை திறந்து வைத்த முதல்வர் 

நாமக்கல் மாவட்டம்  குமாரபாளையத்தில் உள்ள  வாரச் சந்தை திடலில் கலைஞர் நகரப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ்,  அரசு பணிக்காக தேர்வு எழுதும் கல்லூரி மாணவ மாணவிகள்  அனைவருக்கும்  பயன்படும் வகையில் சுமார் ஒரு கோடியே 92 லட்ச ரூபாய் செலவில்,  புதியதாக கட்டப்பட்ட அறிவு சார் மையத்தை, நேற்று  காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து அறிவு சார் மையத்தில், குமாரபாளையம் நகராட்சி  தலைவர் விஜய கண்ணன், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் நகர துணை தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர்  குத்துவிளக்கேற்றி,  அறிவு சார் மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். பார்வையாளர்களாக கலந்து கொள்ள வந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள் அறிவு சார் மையத்தில் உள்ள கணினிகளையும் புத்தகங்களை பார்வையிட்டனர்.   

நகராட்சி  தலைவர் விஜய கண்ணன் மாணவ மாணவிகளுடன் பேசியதாவது: தமிழக முதல்வர் ஒவ்வொரு நாளும், வருங்கால மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். அதில் ஒன்றுதான் இந்த அறிவுசார் மையம். இந்த அறிவுசார் மையத்தில் அனைத்து விதமான உயர்தொழில்  நுட்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் தங்கள் அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் ராஜ், சுமதி, ஜேம்ஸ், நிர்வாகிகள் செந்தில், விக்னேஷ் ஐயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News