மக்களுடன் முதல்வர் திட்டமுகாமினை மாவட்டஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
திருப்பூரில் மக்களுடன் முதல்வர் திட்டமுகாமினை மாவட்டஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
By : King 24x7 Website
Update: 2023-12-19 10:25 GMT
திருப்பூரில் இரண்டாவது நாளாக நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பல்வேறு அரசு துறைகளை இணைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று அவற்றிற்கு உடனடி தீர்வு காணக்கூடிய வகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை நேற்றைய தினம் கோவையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளுக்கும் மூன்று வார்டுகளுக்கு ஒரு பகுதி என நாள்தோறும் இரண்டு பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் நான்காவது மண்டலத்திற்குட்பட்ட வித்யாலயம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் , மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மண்டல தலைவர் பத்மநாபன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு மனுக்களுக்கு உடனடி தீர்வு காணக்கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.