இளைஞர் உயிரை பறித்த சிகரெட்?: தீயில் கருகி உயிரிழந்த பரிதாபம்

திருச்சியில் இரவு குடிப்போதையில் புகை பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது தூங்கியதால் உடலில் தீ பரவி வாலிபர் பலியானார்.;

Update: 2024-01-30 09:27 GMT

கோப்பு படம் 

திருச்சி கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் கோபிநாத் (வயது 32) பெயிண்டர். இவருக்கு திருமணம் ஆகவில்லை.இவருக்கு அதிகமான குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இ.பி பில் கட்டணம் கட்டாத காரணத்தால் மின்வாரியம் இவரது வீட்டின் மின் இணைப்பை துண்டித்து விட்டது.இந்த நிலையில் கோபிநாத் இருட்டில் வசித்து வந்தார். நேற்று குடிபோதையில் இருந்த கோபிநாத் திடீரென தீயில் கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.

Advertisement

இதை பார்த்து அதிர்ச்சிடைந்த பகுதி அப்பகுதி மக்கள் உடனடியாக பொன்மலை போலீசாருக்கு தகவல்தெரிவித்தனர் தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோபிநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் கோபிநாத்துக்கு குடிப்பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்த காரணத்தால் இரவு குடிப் போதையில் புகை பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது தூங்கிய காரணத்தால் உடலில் தீ பரவி முழுவதுமாக எரிந்து இறந்து விட்டார் என தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News