கடலோர காவல் படையினர் கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு !
தூத்துக்குடி கடற்பகுதியில் கேரள விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுகிறார்களா என்று கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-27 09:19 GMT
கடல்
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளது. இந்நிலையில், கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகுகள் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் பெரியதாழை வரையில் கடலோர காவல் படையினர் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதில், தூத்துக்குடி மீன்வளத்துறை ஆய்வாளர் பொன் சரவண கண்ணன் தலைமையில் மீன்வளத்துறை அதிகாரிகள், இந்திய கடலோர காவல் படை அதிகாரிகளுடன் இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த Aadhesh என்ற கப்பலில் கூட்டாக ரோந்து மேற்கொண்டனர்.