தூண் சரிந்து விழுந்ததில் சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு

போரூர் ஏரி அருகே தூண் சரிந்து விழுந்ததில் சாலையில் பள்ளம் ஏற்பட்டது.

Update: 2024-03-21 10:39 GMT

சாலையில் பள்ளம் 

கிண்டியில் இருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் பல்வேறு இடங்களில் பில்லர் எழுப்பி அதன் மீது வெட்ட அமைத்து தண்டவாளங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. போரூர் ஏரி அருகே மெட்ரோ ரயில் தூண் அமைக்க கட்டுமான பணி நடந்து வரும் நிலையில் திடீரென கட்டுமான பணியின் போது கட்டுமான தூண் சரிந்து விழுந்ததில் சாலையின் ஓரத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர் விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் சாலை ஓரத்தில் தடுப்புகள் அமைத்து அந்த வழியாக சென்ற வாகனங்களை மாற்று வழியில் செல்லும் அனுப்பி வைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதே பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரும்பு பில்லரை தூக்கி நிறுத்தம் என்ற போது கிரேன் மோதியதில் குடியிருப்புகள் மீது மோதி உடைந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது தற்போது இந்த பகுதியில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமல் கட்டுமான பணி நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர் அது மட்டும் இன்றி போரூர் ஏரி கரையை ஒட்டி பணிகள் நடந்து வருவதால் அடிக்கடி சாலையில் பள்ளம் விழுவது உள்ளிட்ட பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட்டு வருகிறது போக்குவரத்து போலீசார் உரிய நேரத்தில் தடுப்புகள் அமைத்து வாகனங்களை வேறு வழியில் திருப்பி வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News