திருப்பத்தூரில் பரிசுகள் வழங்கிய ஆட்சியர்

திருப்பத்தூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் கூட்டரங்கில் பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கினார்.;

Update: 2024-01-25 11:08 GMT

விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள்

திருப்பத்தூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு  மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கினார் மாவட்ட ஆட்சியர் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இன்று திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் புறப்பட்டு பிரதான சாலை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று முடிவடைந்தது.

  இந்த ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் பல்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவிகள், மகளிர் மன்றத்தை சேர்ந்த பெண்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என இந்த ஊர்வலத்தில் கலந்துக்கொண்டனர்.

Advertisement

ஊர்வலத்தில் வாக்களிப்பதே சிறந்தது நிச்சயம் வாக்களித்தேன் என் வாக்கு விற்பனைக்கு அல்ல 100% வாக்கு நமது இலக்கு நம் வாக்கு நம் உரிமை வாருங்கள் வாக்களிப்போம் வாக்கின் வலிமை தேசத்தின் வலிமை உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர்.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய பல்வேறு போட்டிகள் வைத்து அதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கினார்.‌

இந்த ஊர்வலத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட திட்ட இயக்குனர் உமாராணி, கோட்டாட்சியர் பானு, வட்டாட்சியர் சிவப்பிரகாசம், மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News