கையெழுத்து இயக்கத்தை கையொப்பமிட்டு துவக்கி வைத்த ஆட்சியர்.
Update: 2023-11-28 07:26 GMT
மாவட்ட ஆட்சியர் தங்கவேல்
மாற்றுத்திறனாளிகள் சமூக தரவுகள் கணக்கெடுப்பு - 2023 குறித்த தொடர்புடைய அரசுத்துறைகள், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் தன்னார்வலர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தை கையொப்பமிட்டு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார் . மாற்றுத்திறனாளிகள் நலத்துறை , மற்றும் அரசு துறை அலுவலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை கொண்டு, மாற்றுத்திறனாளிகள் சமூகத்தரவு கணக்கெடுக்கும் பணி-2023 நேற்று முதல் கரூர் மாவட்டத்தில் துவக்கப்பட்டுள்ளது. இப்பணியினை தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் மாற்றுத்திறனாளிக்காக பிரத்யேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு-2023 குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அமைக்கப்பட்டுள்ள பெரிய பேனரில் மாவட்ட ஆட்சியர் கையொப்பம் செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், மாற்றுத்திறனாளிகள் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்வை சிறப்பித்தனர்.