விருதுநகரில் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்த ஆட்சியர்...!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நோபல் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆட்சித் தலைவர் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.

Update: 2024-01-08 10:45 GMT
விருதுநகர் மாவட்டம் நோபல் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆட்சித் தலைவர் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நோபல் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேர்தல் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் அனைத்து தரப்பு வாக்காளர்களும் பங்களிக்க வேண்டும் என்பதற்காகவும், 2024-இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலமாக தொடர்ச்சியாக இளம் வாக்காளர்களுக்கு குறிப்பாக முதன்முறையாக வாக்களிக்கக்கூடிய வாக்களர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வாக்களிப்பதில் இருக்ககூடிய பொறுப்புகள் மற்றும் உரிமைகள் குறித்தும், வாக்குகளுக்கு வேட்பாளர் தன்னுடைய பணப்பலன்களை வைத்து ஓட்டு பெறுவது ஜனநாயகத்திற்கு புரம்பான ஒரு செயல் எனவும்,

அதனை புறக்கணித்து நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பது பற்றிய பல்வேறு நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு கல்லூரிகளிலும் சென்று விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் களத்தில் நீங்கள் அனைவரும் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் எனவும், வேட்பாளர்கள் பொதுமக்களுக்கு தவறவழிமுறைகளை கையாண்டு வாக்களிக்க கற்றுக்கொடுப்பதை தவிர்த்து அதில் இருந்து நேர்மையான தேர்தல் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தையும்,

ஆற்றல் வாய்ந்த ஜனநாயகமாக மாற வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். பின்பு, மாணவ மாணவிகளுக்கு இன்று இருக்கக்கூடிய நவீன உலகில் நிறைய வாய்ப்புகள் உள்ளது. அந்த வேலைவாய்ப்பிற்கு தேவையான தகுதிகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்ஜெயசீலன் தெரிவித்தார்.

Tags:    

Similar News