மாநகராட்சியானது புதுக்கோட்டை; திமுகவினர் கொண்டாட்டம்

புதுக்கோட்டை நகராட்சி இன்று மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.;

Update: 2024-03-15 12:07 GMT

புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் புதுக்கோட்டை நகராட்சி 42 நகர்மன்ற உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட்டு வந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அறிவித்ததை தொடர்ந்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்ல பாண்டியன் தலைமையில் எம்எல்ஏ மருத்துவர் முத்துராஜா நகர செயலாளர் செந்தில் முன்னாள் எம்எல்ஏ கவிதை பித்தன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட கட்சியின் ஒன்று சேர்த்து வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் .

Advertisement

தமிழக முதல்வருக்கு நன்றி சொல்லி கோஷங்கள் எழுப்பினார்கள். தற்போது நகராட்சி நகர் மன்ற தலைவராக திலகவதி செந்தில் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்க உள்ள நிலையில் கட்சி மூத்த நிர்வாகிகளிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார் அதேபோல் மேயராக பதவி ஏற்க உள்ள திலகவதி செந்திலுக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர் வடக்கு ராஜ வீதியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Tags:    

Similar News