தென்காசி : மரணத்திலும் இணைபிரியாத தம்பதி - நெகிழ்ச்சி சம்பவம்
மனைவி இறந்த மறுநாளே கணவரும் உயிரிழந்தார்;
Update: 2023-12-02 00:35 GMT
மனைவி இறந்த மறுநாளே கணவரும் உயிரிழந்தார்
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே பெத்தநாடாா்பட்டியில் மனைவி இறந்த மறுநாளே கணவரும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெத்தநாடாா்பட்டி காமராஜா் தெருவைச் சோ்ந்த விவசாயி அருணாசலம் நாடாா் (84). இவரது மனைவி பேச்சியம்மாள் (84). இவா்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். வயது மூப்பின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பேச்சியம்மாள், கடந்த செவ்வாய்க்கிழமை (நவ.28) உயிரிழந்தாா். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அருணாசலம், புதன்கிழமை இறந்தாா். மரணத்திலும் இணை பிரியாமல் மனைவி இறந்த மறுநாளே கணவரும் உயிரிழந்த சம்பவம் பெத்தநாடாா்பட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.