செங்கம் அருகே பள்ளி கட்டடத்தை மாவட்ட நிர்வாகம் பார்வையிட கோரிக்கை

தரமற்ற முறையில் தொடக்கப் பள்ளி கட்டிடம் கட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-03-23 09:48 GMT

தரமற்ற பணிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சியில் கடந்த பத்து ஆண்டுகளாக பள்ளி கட்டிடம் இல்லாமல் பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டு கிடைத்த தொடக்கப்பள்ளி கட்டிடம் தற்போது தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு வருவதாகவும் அதனை அப்புறப்படுத்தி மீண்டும் புதியதாக பில்லர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டிப்பட்டி ஊராட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 60க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பயிலும் வகையில் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பள்ளி கட்டிடம் கட்ட பில்லர் அமைக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் அவசர அவசரமாக போடப்பட்டதால் உள்ளே அமைத்துள்ள இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு பில்லர் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒவ்வொரு பில்லரும் கையால் பெயர்த்தாலே பெயர்ந்து வரும் அளவிற்கு தரமற்ற முறையில் பில்லர் அமைத்துள்ளனர் இரு குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டால் இப்படித்தான் வேலை செய்ய முடியும் உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள் என்று கூறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

குழந்தைகள் படிக்க செல்லும் பள்ளி கட்டிடத்தை தரமற்ற முறையில் அமைத்துள்ள ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தரமற்ற முறையில் அமைத்துள்ள பில்லர்களை அப்புறப்படுத்தி புதிய பில்லர்களை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News