விளம்பர பலகைகள் அகற்றும் பணி ,பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் - மாவட்ட ஆட்சியர்
பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்படும் விளம்பர பதாகைகள் குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Update: 2023-10-27 00:56 GMT
திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் தொடர்புடைய ஊராட்சி ஒன்றியங்கள் மூலமாக அறிவுரைகள் வழங்கப்பட்டு அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றும் பணிநடைபெற்று வருகிறது இந்த சமூக நலன் சார்ந்த பணியில் பொதுமக்கள் தங்களையும் இணைத்துக் கொண்டு சாலையில் செல்வோருக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் குறித்தும் புதிதாக விளம்பர பலகைகள் அமைக்கும் பணி நடைபெற்றால் அது குறித்தும் தொடர்புடைய கிராம ஊராட்சி தலைவர்களுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார்.