திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுடன் அமர்ந்து சாப்பிட்ட மாவட்ட ஆட்சியர்
திருப்பத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பரிமாறி மாற்றுத்திறனாளிகளுடன் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் உணவு சாப்பிட்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-02 15:19 GMT
உணவு சாப்பிட்ட ஆட்சியர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அரங்கில் வாரந்தோறும் செவ்வாய் கிழமை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்குவது வழக்கம் இந்த நிலையில் இன்று 116 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இந்நிலையில் கேத்தாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த பிரவீன், சாவித்திரி என்பருடைய மகனான அஸ்வந்த் என்பவருக்கு முதல் பிறந்தநாள் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தார்.
அதனை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிமாறினார். மேலும் மாற்றுத்திறனாளிகளுடன் அமர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் உணவு சாப்பிட்டார் இந்தச் சம்பவம் மாற்றுத்திறனாளிகளிடையே வெகுவான பாராட்டை பெற்றது.