தேசிய கொடியை ஏற்றிய மாவட்ட ஆட்சியர்
நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 75-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (26.01.2024) நடைபெற்ற 75-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜானி டாம் வர்கீஸ்,தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 32 பயனாளிகளுக்கு ரூ.41,80,707/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து காவல்துறை, வருவாய்த்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சுகாதாரத்துறை, மற்றும் பிற துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 290 பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.45,248/- மதிப்பீட்டில் 4 நபர்களுக்கு திறன்பேசிகளையும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.30,000/- மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகையினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு 40,016/ மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரங்களையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.6,550/- மதிப்பீட்டில் உளுந்து விதை, துத்தநாக சல்பேட், வேப்ப எண்ணெய் போன்றவைகளையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 6 நபர்களுக்கு ரூ.20,736/- மதிப்பிலான மிளகாய் மற்றும் விதைகள், தாட்கோ சார்பில் 4 நபர்களுக்கு ரூ.30,55,028/- மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய டிராக்டர், சுற்றுலா வாகனங்களையும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 3 நபர்களுக்கு ரூ.9.03,750/- மதிப்பீட்டில் நாட்டுக்கோழி பண்ணை நிறுவ ஆணையினையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.32,879/- மதிப்பீட்டில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வு தொகைக்கான ஆணையினையும், மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.46,500/- மதிப்பீட்டில் தள்ளுவண்டி மற்றும் திருநங்கையின் அழகு நிலையத்திற்கு குளிர்சாதன கருவி வாங்க காசோலைகளையும் என மொத்தம் 32 பயனாளிகளுக்கு ரூ.41 இலட்சத்து 80 ஆயிரத்து 707 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பேபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், வட்டாசியர்கள், துணை ஆட்சியர்கள். கல்வித்துறை, வருவாய்த்துறை, சுகாதரத்துறை, காவல்துறையினர் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.