வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்
கோவை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்;
Update: 2023-10-27 10:21 GMT
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
01.01.2024 ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட நிலையில் அனைத்து வாக்கு சாவடி மையங்களில் விண்ணப்பம் பெறபட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டது.இந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டார்.இன்று வெளியிடபட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி கோவை மாவட்டத்தில் 14,96,770 ஆண்களும் 15,51,665 பெண்கள் மற்றும் 569 பேர் மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 30,49,004 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடபட்டதை தொடர்ந்து பெயர் நீக்கம்,சேர்த்தல்,மற்றும் திருத்தங்கள் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலகம் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் மேற்கொள்ளாபடும் என ஆட்சியர் தெரிவித்தார்.மேலும் எதிர்வரும் 4.11.2023 அன்றும் 5.11.2023 மற்றும் 18.11.2023 அன்றும் 19.11.2023 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாகவும் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பம் செய்து கொள்ளலாம் எனவும் விண்ணப்பங்கள் 09.12.2023 வரை பெறப்படும் என தெரிவித்தார்.