உங்களை நம்பி எப்படி வாக்களிப்பது – திமுக வேட்பாளர் பரபரப்புரையில் கூச்சலிட்ட நபரால் பரபரப்பு

ராஜபாளையம் பகுதியில் திமுக வேட்பாளர் பிரச்சாரத்தின் போது மணல் திருட்டு குறித்து கேள்வி எழுப்பிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-04-12 09:25 GMT
ராஜபாளையம் பகுதியில் திமுக வேட்பாளர் தீவிர பரப்புரை ஈடுபட்டார்

தென்காசி பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் ராணி ஶ்ரீ குமார் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள புத்தூர், காமராஜர் நகர், பாரதி நகர், நல்லமங்கலம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் இன்று பகலில் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரயின் போது திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியன், ஊராட்சி சேர்மன் சிங்கராஜ் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். வேட்பாளர் வாக்கு சேகரித்து முடிந்ததும், எம்எல்ஏ மைக்கை வாங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த சாலமன் என்பவர் ஏற்கெனவே உங்கள் பேச்சை கேட்டு திமுகவுக்கு குடும்பத்துடன் வாக்களித்ததற்கு இது வரை குடிநீர், சாலை வசதி செய்து தரப்படவில்லை. அடுத்ததாக உங்கள் பேச்சை கேட்டு ஊராட்சி தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தோம். ஆனால் அவர் லாரி, லாரியாக மணலை திருடி விற்பனை செய்து வருகிறார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வரை புகார் அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மீண்டும் உதயசூரியன் சின்னத்திற்கு நாங்கள் எப்படி நம்பி வாக்களிப்பது என கூச்சலிட்டார். அவரை எம்எல்ஏ தடுக்க முயன்றும் தொடர்ந்து கூச்சலிட்டதால் அந்த இடத்தில் இருந்து வேட்பாளர், எம்எல்ஏ உள்ளிட்டோர் ஓட்டம் பிடித்தனர். அவரை காவல் துறையினர் சமாதானப்படுத்த முயன்ற போது, நாங்கள் வாக்களித்தவர்களிடம் கேட்கிறோம் என பதிலளித்ததால், காவல் துறையினரும் அமைதியாகினர். மேலும் அவர் ஊராட்சி தலைவர் குறித்தும், அடிப்படை வசதிகள் செய்து தராதது குறித்தும், மணல் திருட்டு குறித்தும் தொடர்ந்து கூச்சலிட்டார்.

Tags:    

Similar News