நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த ஓட்டுநர்
மயக்கம் வருவதாக பேருந்தை நிறுத்திய ஓட்டுநர். நெஞ்சு வலியால் மயங்கி விழுந்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-20 06:08 GMT
நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த ஓட்டுநர்
ஒட்டன்சத்திரம் நகரில் இருந்து பொருளூர் செல்லும் அரசு பேருந்தை இன்று 19.02.2024- சுரேஷ் என்பவர் ஓட்டி வந்தார். இந்த பேருந்து கப்பல் பட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு செல்லும் போது மயக்கம் வருவதாக பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் நெஞ்சு வலியால் மயங்கி விழுந்தார். உடனே அருகில் நூறு நாள் பணியாளர்கள், பொதுமக்கள் தேவத்தூர் மருத்துவ மனையில் அவரை அனுமதித்தனர். ஓட்டுநர் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினார்கள்.