இறந்தவரால் பார்வை பெற போகும் இருவர்-கிருஷ்ணகிரியில் நெகிழ்ச்சி சம்பவம்
இயற்கை மரணம் அடைந்தவரின் கண்களை தானம் செய்த குடும்பத்தினர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவியில் நாகராஜ் என்பவர் இயற்கை மரணம் அடைந்தார். அவரின் குடும்பத்தினர் கல்லாவி பகுதியில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் அறம் விதை அறக்கட்டளை தொடர்பு கொண்டு மறைந்த நாகராஜ் என்பவரின் இரு கண்களையும் தானமாக வழங்க விருப்பம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த கண் மருத்துவர் கலையரசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி கெரிகேப்பள்ளி தலைமை ஆசிரியர் வீரமணி ஒருங்கிணைப்பில் இயற்கை மரணம் அடைந்த நாகராஜ் அவர்களின் கண்கள் தானமாக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் பிரிவுக்கு வழங்கப்பட்டது.
இவரது கண்கள் கண்பார்வை இல்லாத இரண்டு நபர்களுக்கு பொருத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். துக்க நிகழ்விலும் கண் தானம் செய்ய தானாக முன்வந்த குடும்பத்தினரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி சென்றனர். இதற்கு உறுதுணையாக இருந்த தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி கண் மருத்துவர் அஸ்வினி, கண் மருத்துவ உதவியாளர் கிரண்ராஜ், வாகன ஓட்டுநர் ராமஜெயம், மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் பிரிவு மருத்துவர்கள் அனைவருக்கும் கல்லாவி ஊர் பொதுமக்கள் சார்பாக நன்றி தெரிவித்தனர். மறைந்து மண்ணில் புதைக்கப்படும் கண்களை உலகை காண இயலாதவர்களின் கண்களில் வைத்து வாழ்வில் ஒளி கொடுப்போம்.