கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி
சேத்துப்பட்டு அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
Update: 2024-05-31 15:40 GMT
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன் (வயது 66), விவசாயி. இவர் தன்னுடைய நிலத்தில் மாட்டுக்கு புல் அறுத்துக் கொண்டிருந்த போது கிணற்றில் தவறி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது,செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து சேத்துப்பட்டு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.