மகன் காணவில்லை என தந்தை புகார்

திருப்பத்தூர் மாவட்டம், ஜே.என்.ஆர் நகர் பகுதியில் கடைக்கு சென்ற மகன் காணவில்லை என தந்தை காவல் நிலையத்தில் புகார்

Update: 2024-04-26 15:32 GMT

வாலிபர் மாயம்

ஜோலார்பேட்டை அருகே ஜே.என்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் இவருக்கு மல்லிகா மற்றும் கவிதா என்கின்ற இரண்டு மனைவிகள் உள்ளன இந்நிலையில் 2 வது மனைவியான கவிதாவின் மகன் பிரவீன் (வயது 25) என்பவர் கடந்த 22ஆம் தேதி சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார் வீடு திரும்பவில்லை.

இதனால் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் தந்தை மகேந்திரன் ஜோலார்பேட்டை கவால் நிலையத்தில் கடைக்கு சென்ற மகன் காணவில்லை என புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன வாலிபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News