இறுதி கட்ட பிரச்சாரம் - 1000.க்கும் மேற்பட்ட திமுகவினர் ஊர்வலம்
ராசிபுரத்தில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தையொட்டி 1000.க்கும் மேற்பட்ட திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தனர்.
Update: 2024-04-18 02:51 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு கட்சிகள் சார்பாக வாக்காள பெருமக்களிடம் வாக்கு சேகரிக்க கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். புதன்கிழமை மாலை இறுதி கட்ட பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர் வி எஸ் மாதேஸ்வரனை ஆதரித்து ராசிபுரத்தில் அமைச்சர் மதிவேந்தன் மற்றும் திமுக நகர செயலாளர் என்.ஆர். சங்கர், நகர மன்ற தலைவர் கவிதா சங்கர் ஆகியோர் தலைமையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் சேகர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ராசிபுரம் பழைய பஸ் நிலையம், கடைவீதி, புதிய பஸ் நிலையம், ஒரு வழிச்சாலை, புதுப்பாளையம் சாலை, மீண்டும் பழைய பஸ் நிலையம் வரை வாக்காளர்கள் இடத்தில் வாக்குகள் சேகரிக்க ஊர்வலமாக சென்றனர். அப்போது போடுங்கம்மா ஓட்டு உதய சூரியனை பார்த்து என்று கோஷங்கள் முழங்க திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குகள் கேட்டு சென்றனர்.