தமிழகத்தின் நிதிநிலை சற்று சிரமமாக தான் உள்ளது - அமைச்சர் முத்துசாமி

தமிழகத்தின் நிதிநிலை சற்று சிரமமாக தான் உள்ளது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.;

Update: 2024-03-05 10:02 GMT

கூட்டத்தில் பேசும் அமைச்சர்

எல்லோருக்கும் எல்லாம் , தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா மற்றும் தமிழக நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் ஈரோடு கள்ளுக்கடைமேட்டில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திமுக துணை பொதுசெயலாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி , தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் சு.முத்துசாமி , தமிழகத்தின் நிதிநிலை சற்று சிரம்மாக தான் உள்ளதாகவும் , காரணம் கடந்த அதிமுக ஆட்சியில் சரியாக நிர்வாகம் செய்யவில்லை என்றார். கொரோனோ காலத்தில் கட்சி பாகுபாடுன்றி அனைவருக்கும் திமுகவினர் உதவி செய்தனர் என்றார்.

Tags:    

Similar News