பழுது பார்ப்பவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்த வீரர்கள்
சுத்தமல்லி கொண்டாநகரம் ஆற்றில் பழுதான நீரேற்று நிலைய மோட்டரை சரிசெய்ய வந்த ஊழியர்களை தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.;
Update: 2023-12-24 07:03 GMT
பாதுகாப்பாக அழைத்து சென்ற தீயணைப்பு வீரர்கள்
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி கொண்டாநகரம் ஆற்றில் உள்ள நீரேற்று நிலைய மோட்டார் வெள்ளத்தின் காரணமாக பழுதாகி உள்ளது.இதனை சரி செய்வதற்காக பழுது பார்ப்பவர்கள் நெல்லைக்கு வந்துள்ளனர். அவர்களை பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் ஆற்றில் பாதுகாப்பாக ஆழைத்து சென்றனர். அதனை தொடர்ந்து மோட்டார் பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகின்றது.