தாமிரபரணியில் குறையும் வெள்ளநீர்
நெல்லை தாமிரபரணி ஆற்றில் படிப்படியாக வெள்ளநீர் குறைந்து வருகிறது.
Update: 2023-12-19 10:59 GMT
நெல்லை தாமிரபரணி ஆற்றில் படிப்படியாக வெள்ளநீர் குறைந்து வருகிறது. மாநகர பகுதிகளான ஜங்ஷன், சிந்துபூந்துறை போன்ற பகுதிகளில் நேற்று வரை நின்ற வெள்ளை நீரானது தற்போது வடிந்து வருகிறது. அந்த பகுதியில் உள்ள கடைகளை திறந்து அதன் பாதிப்புகளை உரிமையாளர்கள் பார்த்து வருகின்றனர். பாதிப்புகள் அதிக அளவு உள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.