தொமுச கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கிய முன்னாள் எம்எல்ஏ
தர்மபுரி நகராட்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் உள்ள தொமுச கொடியை தருமபுரி முன்னாள் எம்எல்ஏ ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.;
Update: 2024-05-01 10:19 GMT
தர்மபுரி நகராட்சியில் போக்குவரத்து தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் உள்ள தொமுச கொடியை தருமபுரி முன்னாள் எம்எல்ஏ ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.
இன்று (01.05.2024) மே-1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தருமபுரி நகராட்சியில் உள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் உள்ள தொமுச கொடியை தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம்.சுப்ரமணி Ex.MLA ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் துரைசாமி , மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கெளதம் , மகளிரணி சாந்தரூபி,தலைவர் சின்னசாமி , பொருளாளர் சேகர்,அலுவலக செயலாளர் தினகரன் , கிளை தலைவர் சரவணன், கிளை செயலாளர் முருகன், பொருளாளர் பழனி, நிர்வாகிகள் குமார், ராஜாமணி, குணசேகரன், அருள்மணி , காளியப்பன்,கந்தசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.