அரசு பேருந்து தடுப்பு சுவரில் மோதியதால் பரபரப்பு

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே வைக்கப்பட்ட தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2024-05-14 15:26 GMT

தடுப்பு சுவரில் மோதிய அரசு பேருந்து 

ஈரோடு பகுதியைச் சேர்ந்த செந்தில்ராஜா வயது (38) இவர் இன்று அதிகாலை 5 : 50 மணிக்கு ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 22 பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது சேலம் மாவட்டம் சங்ககிரி வி. என். பாளையம் பகுதியில் அதிகாலை 6:30 மணிக்கு சென்ற பேருந்து ஓட்டுநர் செந்தில்ராஜாவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு பேருந்தை நிறுத்த முயன்ற பொழுது சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவற்றில் பலத்த சத்தத்துடன் மோதி நின்றது இதில் பேருந்தில் முன் பகுதி முழுவதும் சேதம் அடைந்தது மேலும் பேருந்தில் பயணம் செய்த 22பயணிகள் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். மயக்கம் அடைந்த ஓட்டுநர் செந்தில் ராஜாவை சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்த்து முதல் சிகிச்சைக்காக பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த சங்ககிரி போலீசார் சாலை நடுவே இருந்த பேருந்தை அப்புறப்படுத்தி பயணிகளை மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News