அரசு சொகுசு பஸ் டிவைடர் மீது ஏறி நின்றது.
குமாரபாளையத்தில் உள்ள புறவழிச்சாலையில் அரசு சொகுசு பஸ் டிவைடர் மீது ஏறி நின்றது.
By : King 24x7 Website
Update: 2023-12-27 17:22 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள சேலம், கோவை புறவழிச்சாலையில், கவுரி தியேட்டர் பின்புறம், நேற்றுமுன்தினம் அதிகாலை 03:00 மணியளவில் கோவையிலிருந்து சேலம் நோக்கி அரசு சொகுசு பஸ் ஒன்று வந்துகொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக அங்குள்ள டிவைடர் மீது ஏறி நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பயணிகள் கீழே இறங்கினர். அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடம் வந்து பயணிகள் உள்ளிட்டவர்களை மீட்டனர். அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் உதவி செய்தனர். அதன்பின் இழுவை இயந்திரம் கொண்டுவரப்பட்டு பஸ்ஸை மீட்டனர். இது குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.