நாமக்கல்லில் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் தொடக்கம்!

ரஷ்யா, சீனா, ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளின் வல்லுநர்களால் பயிற்சி பெற்ற 100-க்கும் மேற்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள் பங்கேற்று, பல்வேறு சாகசங்களை நிகழ்த்துகின்றனர்.

Update: 2024-06-10 18:00 GMT
சர்க்கஸ்

நாமக்கல் கந்தசாமி கண்டர் பள்ளி மைதானத்தில் LIC அருகில் ‘தி கிரேட் இந்தியன் சர்க்கஸ்’ தொடங்கியது. இந்த சர்க்கஸ், கடந்த 30 ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூர் உட்பட 30-க்கும் மேற்பட்ட வெளி நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ‘தி கிரேட் இந்தியன் சர்க்கஸ்' மேலாளர் பாபு கூறும்போது, "ரஷ்யா, சீனா, ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளின் வல்லுநர்களால் பயிற்சி பெற்ற 100-க்கும் மேற்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள் பங்கேற்று, பல்வேறு சாகசங்களை நிகழ்த்துகின்றனர். குறிப்பாக அந்தரத்தில் பறக்கும் ரஷ்யன் அக்ரோ பெட், 60 அடி உயரத்தில் அழகிய பெண் நடனமாடும் ரஷ்யன் ரிங் பேலன்ஸ், பல வளையங்களை கால்களால் விளையாடும் விளையாட்டு, பெண்கள் கயிற்றை கொண்டு சாகசம் புரியும் விளையாட்டு, எந்த சர்க்கஸிலும் இடம்பெறாத உலக புகழ்பெற்ற கலைஞர்களின் ஜிம்னாஸ்டிக் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

பின்புறம் உள்ள பொருளை திரும்பி பார்க்காமல், முகம் பார்க்கும் கண்ணாடியின் உதவியுடன் குறி தவறாமல் துப்பாக்கி சுடுதல், மரணக் கூண்டில் கலைஞர்கள் செய்யும் சாகச நிகழ்ச்சி, உயிரை பணயம் வைத்து அந்தரத்தில் தலைகீழாக அழகி நடக்கும் ஸ்கைவாக், பிடிமானம் ஏதும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கும் பேலன்ஸிங் டிரிபிஸ், குதிரையின் மீது அமர்ந்து கொண்டு அழகி செய்யும் சாகசம், பிரேக் இல்லாத சைக்கிளில் முன் சக்கரம் தரையில் படாமல் தூக்கிக்கொண்டு ஓட்டுதல் உள்ளிட்ட சாகசங்கள் இடம்பெறுகின்றன. பகல் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணிக்கு சர்க்கஸ் காட்சிகள் நடக்கின்றன. கட்டணம் ரூ.100, ரூ.150, ரூ.200. முன்பதிவு ரூ.150, ரூ.200 ஆகும். சர்க்கஸ் வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மேற்கொள்ளலாம்.

Tags:    

Similar News