தனியார் நூற்பாலைக்கு சுகாதாரத்துறையினர் அபராதம்
தனியார் நூற்பாலைக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-02 06:03 GMT
நூற்பாலை
வடமதுரை பகுதியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலைகளில் தொழிலாளர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் மற்றும் தண்ணீர் தொட்டிகளை சுகாதாரத்துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். இதில் வடமதுரையில் உள்ள தனியார் நூற்பாலையின் கழிப்பறைகள் சுகாதாரம் இல்லாமல் இருந்தது.
மேலும், நீர் தொட்டிகளில் டெங்கு கொசுக்களின் புழுக்கள் அதிகம் இருந்தன. இதையடுத்து நூற்பாலை நிர்வாகத்திற்கு அதிகாரிகள் ரூ.10000 அபராதம் விதித்தனர்.தனியார் நிறுவனங்களில் சுகாதார நடவடிக்கைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். வடமதுரை வட்டாரத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.