மாற்றுத்திறனாளி மனைவியை கொடுமைப்படுத்திய கணவர்
மாற்றுத்திறனாளி மனைவியை கொடுமைப்படுத்திய கணவர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-05 06:08 GMT
மாற்றுத்திறனாளி மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் மீது வழக்கு
திருக்கோவிலுார் அடுத்த வீரட்டகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் சந்தோஷ், 36; இவரது மனைவி ராஜேஸ்வரி, 20; வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இருவரும் கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளர்கள். கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்தது. ராஜேஸ்வரி கர்ப்பமானதும், கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து கருவை கலைக்க வைத்துள்ளார். மேலும், வரதட்சணை கேட்டு ராஜேஸ்வரியை அடித்து கொடுமைப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், வாடகை வீட்டின் உரிமையாளரான மணிமேகலையும் ராஜேஸ்வரியை திட்டி தாக்கியுள்ளார். இது குறித்து ராஜேஸ்வரியின் தாய் இன்பநிலா, 38; கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.