மனைவி மீது சுடு தண்ணியை ஊற்றிய கணவன்
காரைக்குடியில் மனைவி மீது சுடுதண்ணியை ஊற்றிய கணவன் மீது வழக்கு பதிவு;
By : King 24x7 Angel
Update: 2024-02-02 12:33 GMT
மனைவி மீது சுடு தண்ணியை ஊற்றிய கணவன் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் பெருமாள்(70) இவரது மனைவி அழகு(60). பெருமாள் ஒரு குடிகாரர் என கூறப்படும் நிலையில் வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதோடு அவர் மீது, சுடு தண்ணீரை ஊற்றிய நிலையில் படுகாயமடைந்த அழகு காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து காரைக்குடி போலீசார் பெருமாள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.