மதுரையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்திடும் பணி நாளை தொடக்கம்

மதுரையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்திடும் பணி நாளை நடைபெற உள்ளது.

Update: 2024-05-27 16:14 GMT

மாவட்ட ஆட்சியர் 

தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும்கட்டாக்கல்வி உரிமைச்சட்டம், 2009 பிரிவு 12(1) (c) இன்படி அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் (LKG/I st std) குறைந்தபட்சம் 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிடும் பொருட்டு தகுதியுள்ள 382 பள்ளிகளுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டுப்படி 4044 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது,

மேற்படிதகுதியுள்ள இடங்களுக்கு பெற்றோர்களிடமிருந்து இணைய தளம் மூலம் 22.4.2024 முதல் 20.5.2024 முடிய 8591 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதனை ஆவணங்கள் மற்றும் விதிகளின்படி சரிபார்க்கப்பட்டதில் 7913 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டும் 99 விண்ணப்பங்கள் தகுதியற்றவை எனவு 579 நபர்கள் விண்ணப்பங்களில் உரிய ஆவணம் இல்லை என முடிவு செய்யப்பட்டு தகுதிவாய்ந்த விண்ணப்பரார்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட இடத்தினைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் இருக்கும் பட்சத்தில்,

குலுக்கல் முறையில் தேர்வு செய்திடும் பணி நாளை 28..5.2024 காலை 9.30 மணியளவில் தொடங்கி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது . இப்பணிக்கான அரசு பார்வையாளர்களாக அரசுப்பள்ளித் தலைமையாசிரியர்கள் , வட்டாரக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர்பயிற்றுனர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம 382 பேர்கள் நியமனம்செய்யப்பட்டு இவர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 27,5,2024 மாலை 2.00 மணியளவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமைய்யில் நடைபெற்றது . மேற்படி அரசுப்பார்வையாளர்கள் முன்னிலையில் ஒளிவுமறைவு அற்ற முறையில் குலுக்கல் நடைபெறும்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பெயர்பட்டியல் மற்றும் காத்திருப்போர் பட்டியல் ஆகியவை 29.5.2024 அன்று பள்ளி அறிவிப்புப்பலகையில் ஒட்டப்படும் .இப்பணிகள் எவ்விதமான புகாருக்கும் இடமளிக்காமல் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்லைவர் , முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் உதவித்திட்ட அலுவலர்கள் பார்வையிடுவார்கள் .

Tags:    

Similar News