கொத்தனாரை கரண்டியால் தாக்கியவர் கைது
தூத்துக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனாரை கரண்டியால் தாக்கிய மற்றொரு கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனாரை கரண்டியால் தாக்கிய மற்றொரு கொத்தனாரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி கந்தசாமி புரத்தைச் சேர்ந்தவர் ஆண்டிமுத்து மகன் மாரிமுத்து (43), டி.எம்.பி., காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் காமராஜ் (43). இவர்கள் 2பேரும் கொத்தனாராக வேலை செய்து வருகிறார்கள். நேற்று வேலை முடிந்து கந்தசாமிபுரத்தில் வைத்து மது குடித்தார்களாம்.
அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த காமராஜ் மாரிமுத்துவை கொத்த வேலை செய்யும் கரண்டியால் சரமாரியாக தாக்கினாராம். இதில் பலத்த காயம் அடைந்த மாரிமுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் வட பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப் பதிந்து, காமராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.