சமாதானம் செய்ய சென்ற பெண்ணை தாக்கியவர் கைது
எம்ஜிஆர் நகரில், தகாத வார்த்தை பேசி தகராறு செய்தவர்களை சமாதானம் செய்யச் சென்ற பெண்ணை கைகளால் தாக்கி துன்புறுத்திய நபர் கைது. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புன்னம் சத்திரம் அருகே உள்ள பெரிய ரங்கபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகன் கமலேஷ் வயது 30. இவரும் இவரது மனைவியும் நவம்பர் 12ஆம் தேதி மாலை 7 மணி அளவில், புன்னம் சத்திரம் எம்ஜிஆர் நகரில், பெட்டிக்கடை நடத்தி வரும் லட்சுமி என்பவர் வீட்டிற்கு முன்பாக தகாத வார்த்தை பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, லட்சுமி அவர்களிடம் சமாதானம் பேசி உள்ளார். இதனால் மேலும் கோபமடைந்த கமலேஷ் லட்சுமி தகாத வார்த்தை பேசி கைகளால் தாக்கி துன்புறுத்தி, மிரட்டல் விடுத்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக லட்சுமி வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகார் என்று சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தகாத செயலில் ஈடுபட்ட தமிழிசை கைது செய்து அவர் மீது நவம்பர் 13ஆம் தேதி வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்