குளத்தில் குளிக்க சென்ற கொத்தனார் மூச்சு திணறி பலி
சங்கரன்கோவில் அருகே அழகு நாச்சியாபுரத்தில் குளத்தில் குளிக்க சென்ற கொத்தனார் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Update: 2024-01-17 04:45 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அழகு நாச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் இவர் கொத்தனார் ஆக பணியாற்றி வந்தார், இந்த நிலையில் ஊர் அருகில் உள்ள மகேஷ்குமார் குளத்தில் குளிக்க சென்ற போது மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த குருவிகுளம் போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இது குறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.