துணை கண்காணிப்பாளரை நேரில் சந்திதது மாதர் சங்கத்தினர் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மகளிர் காவல் நிலையத்தில் துணை கண்காணிப்பாளரை மாதர் சங்கத்தினர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2024-03-14 13:17 GMT

துணை கண்காணிப்பாளர் சந்தித்த மகளிர் சங்கத்தினர்

கடந்த 5 நாட்களாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வெள்ளகோவில் தேர் திருவிழாவில் அரங்கேறிய 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை கொடூர செயலை அடுத்து போலிசாரின் அதிரடி நடவடிக்கையால் நேற்று வரை சுமார் 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் பல வித இணையதள சேவைகள் வழியே இந்த சம்பவம் குறித்த செய்திகளும் புகைப்படங்களும் பரவி வரும் நிலையில் இன்று மதியம் திருப்பூர் மாவட்ட மாதர் சங்க தலைவர் ச.பவித்ரா, துணைத் தலைவர் எஸ். பானுமதி, , பொருளாளர் ஆர்.கவிதா, மற்றும் டி.ஒய்.எஃப்.ஐ.  பொருளாளர் ஆர்.பாலமுரளி ஆகியோர் காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளர் கு‌.  பார்த்திபனை நேரில் சந்தித்து பாதிக்கப்பட்ட ஏழை குடும்பத்தை சேர்ந்த அந்த சிறுமிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும்,

இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது முழுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், எக்காரணத்தை கொண்டும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தப்பித்துவிடக்கூடாது எனவும், மேலும் இது போன்ற கொடூர செயல்கள் நடைபெற மூலதனமாக இருக்கும் போதை பொருட்கள் சம்பந்தமான விழிப்புணர்வு,

தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாதர் சங்கத்தினர் திருப்பூரில் போதை பொருள் தடுப்பதற்கு  காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்தும்,

சம்பந்தப்பட்ட ஆட்களை தெரியப்படுத்தினாலும் கூட முழுமையான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும், இன்றும் பல இடங்களில் போதை பொருட்கள் புழக்கத்தில் தான் உள்ளது எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News