கெங்கவல்லி அருகே பந்தலை டிராக்டரால் இடித்து தள்ளிய தாய்மாமன் கைது

கெங்கவல்லி அருகே கல்யாண பந்தலை டிராக்டரால் இடித்து தள்ளிய தாய்மாமன் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-01-19 09:49 GMT
காவல் நிலையம் 

சேலம் மாவட்டம்  கெங்கவல்லி அருகே, அக்கா மகன் திருமணத்திற்கு பத்திரிகை வைக்காததால், கல்யாண பந்தலைடிராக்டர் மூலம் இடித்து தள்ளி, கொலை மிரட்டல் விடுத்த தாய்மாமனை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே புனல்வாசல் பகுதியைச் சேர்ந்த ராமநாதன்- பிரியா தம்பதியின் மகன் ராமமூர்த்தி. இவருக்கு வருகிற 21ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக வீட்டில் பந்தக்கால் நட்டு, வீட்டின் முன் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரியாவின் தம்பியான சிவக்குமார்(40) என்பவருக்கு, திருமண நிகழ்ச்சிக்கு பிரியா பத்திரிகைவைக்கவில்லை. இதனால் அவர் களுக்குள் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்தனர். அக்கா திருமண பத்திரிகை வைக்காத கோபத்தில் இருந்த சிவக்குமார், நேற்று தனது டிராக்டரை எடுத்து சென்று, பிரியா வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த பந்தக்கால் மற்றும் பந்தலை இடித்துதள்ளினார்.

பின்னர், எனக்கு பத்திரிகை வைக்காமல் எப்படி திருமணம் நடைபெறும்? என அக்கா பிரியா, மாமா ராமநாதன் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ராமநாதன் கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

அதன் பேரில், சிவக்குமார் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இந்த சம் பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News