தூத்துக்குடியில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை ஆய்வு செய்த மேயர்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
By : King 24X7 News (B)
Update: 2024-01-19 15:29 GMT
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன் நகர், ரஹமத் நகர், ராம் நகர், அய்யாசாமி காலனி, முத்தம்மாள் காலனி, மச்சாது நகர், ஆதிபராசக்தி நகர், ஸ்டேட் பாங்க் காலனி, அய்யர்விளை மற்றும் கோயில் பிள்ளை விளை ஆகிய பகுதியில் நடைபெற்று முடிந்த மழைநீர் வெளியேற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.
மேலும் இப்பகுதியில் வடிகால் பணிகள் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார். ஆய்வின்போது, திமுக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் அந்தோணி மார்ஷலின், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.