மின் விளக்குகள் அமைக்கும் பணிகளை மேயர் ஆய்வு!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 'ஸ்மார்ட் போல்' என்ற திட்டத்தில் மின் விளக்குகள் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

Update: 2023-12-15 13:07 GMT

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 'ஸ்மார்ட் போல்' என்ற திட்டத்தில் மின் விளக்குகள் அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பிரதான சாலைகளில் புதியதாக ஸ்மார்ட் போல் என்ற திட்டத்தில் முதற்கட்டமாக 868 மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாநகரில் அம்பேத்கர் நகர், மில்லர்புரம் சாலை, பூபால்ராயர்புரம் மற்றும் எட்டயாபுரம் ரோடு ஹவுசிங் போர்டு ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஸ்மார்ட் போல் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார். மேலும் இதுபோல் அமைக்கப்பட்டுள்ள மற்ற பகுதிகளில் 2 நாட்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார். மேலும் நான்காம் கேட் முதல் புதிய பேருந்து நிலையம் வரை நடைபெறும் சாலை மற்றும் விரிவாக்க பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது, திமுக மாநில மீனவரணி துணை செயலாளர் துறைமுகம் பிளாரன்ஸ், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர். .

Tags:    

Similar News