அரண்மனை புதூரில் நடைப்பயணத்தை தொடங்கி வைத்த அமைச்சர்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரண்மனை புதூர் பகுதியில் நடை பயணத்தை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.;
Theni
நடைபயணத்தில் அதிகாரிகள்
தமிழ்நாடு விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரண்மனை புதூர் பகுதியில் நடை பயணத்தை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவான ,திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் ,பெரியகுளம் எம் எல் ஏ சரவணகுமார் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி மதுமதி மற்றும் தேனி ஒன்றிய சேர்மன் சக்கரவர்த்தி ஒன்றிய துணை சேர்மன் முருகன் மற்றும் தேனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், மாவட்ட மருத்துவ துணை இயக்குனர் குமரகுருபரன், மாவட்ட வட்டார மருத்துவ அலுவலர் பிரியா, சுகாதார கண்காணிப்பாளர் முருகேசன், தேனி மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் ,ஆகியோர்கள் கலந்து கொண்டு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் நடைபயணத்தில் மேற்கொண்டனர்.