அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தவருக்கு அமைச்சர் பாராட்டு
அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தவருக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
தமிழக அரசின் நலத்திட்டங்களை உடனுக்குடன் மக்களிடையே கொண்டு சேர்க்க உதவிய களம்பூர் அகத்தியனை அமைச்சர் எ.வ.வேலு பாராட்டினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் நலதிட்டங்களை களம்பூர் சேர்ந்த அகத்தியன் என்பவர் பேஸ்புக்கில் 400 குரூப்பிற்கும்,
மேலும் வாட்ஸ்அப் ல் 400 குரூப்பிற்கும், டிவிட்டர், டெலிகிராம் குரூப்பிலும் இன்ஸ்டாகிராமிலும் தமிழ்நாடு முழுவதும் உடனுக்குடன் மக்களிடம் சேர்த்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தி.மலை.வடக்கு மாவட்ட செயளாலர் எம்.எஸ்.தரணிவேந்தன் வாழ்த்து தெரிவித்து பின்பு தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலுவிடம்அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.
களம்பூர் அகத்தியன் தகவல்தொழில்நுட்ப அணியில் எந்த ஒரு பொறுப்பில் இல்லாமலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகளை தெரிவித்தார்.