முகாம்களில் தங்கியுள்ளோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர்

Update: 2023-12-08 02:39 GMT

நிவாரண பொருட்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தேனம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள, தாழ்வான பகுதியில் குடியிருந்த இருளர் குடியிருப்பை சேர்ந்தவர்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டம், வையாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நிவாரண முகாம் மற்றும் களியனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி, அங்கு தங்கி உள்ளவர்களுக்கான இலவச மருத்துவ முகாமினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து ஓரிக்கை மெயின் ரோடு வேளிங்கைபட்டறை பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய், காமாட்சி அம்மன் காலனியில் மழைநீர் தேங்கி உள்ள பகுதியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தாயார் குளம் பகுதியில் வேகவதி ஆற்றினை தூர்வாரும் பணியினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார். இவ் ஆய்வின் போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி , உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா, வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் தேவேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News