முன்னாள் கவுன்சிலர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்

விழுப்புரத்தில் நடைபெற்ற முன்னாள் கவுன்சிலர் இல்ல திருமண நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.;

Update: 2024-06-27 01:52 GMT

விழுப்புரத்தில் நடைபெற்ற முன்னாள் கவுன்சிலர் இல்ல திருமண நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.


விழுப்புரம் லோகலட்சுமி மஹாலில், முன்னாள் கவுன்சிலர் பாபு- புஷ்பா மகன் பாலச்சந்திரன்- நிருலா திருமண விழா நடைபெற்றது.உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசாலாட்சி பொன்முடி, விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் டாக்டர் லட்சுமணன், சிவக்குமார், தி.மு.க., மாவட்ட செயலாளர் கவுதமசிகாமணி, நகர் மன்ற சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் முகையூர் சம்பத், புஷ்பராஜ், சேர்மன் ஜனகராஜ் ஆகியோர் மணமக்களை நேரில் வாழ்த்தினர்.

Advertisement

இதில், விழுப்புரம் நகராட்சி கமிஷனர் ரமேஷ், அப்பச்சி ஓட்டல் உரிமையாளர் நெல்லை கண்ணன், ஆர்.டி.என். காய்கறி மண்டி உரிமையாளர் ரமேஷ், தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் தினகரன், மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன், நகர செயலாளர் சக்கரை, அ.தி.மு.க., நகர செயலாளர் பசுபதி, பா.ம.க., நிர்வாகிகள் அன்புமணி, தங்கஜோதி, மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.முன்னதாக பி.முட்லுார் நேரு, உமா மகேஸ்வரி, உதயா, பொறியாளர் இளஞ்செழியன் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரையும் வரவேற்றனர்.

Tags:    

Similar News