காணாமல் போனவர் அரைமணி நேரத்தில் ஒப்படைப்பு
திருப்பத்தூர் அருகே காணாமல் போன ஒருவரை தஞ்சம் அடைந்த அரைமணி நேரத்தில்போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர்.;
திருப்பத்தூர் அருகே காணாமல் போன ஒருவரை தஞ்சம் அடைந்த அரைமணி நேரத்தில்போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே காணாமல் போன ஒருவரை தஞ்சம் அடைந்த அரைமணி நேரத்தில் உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ்!. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியை சேர்ந்த ராமு என்பவரின் மகன் பிறப்பின் போது இருந்து மன நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் வீட்டில் இருந்து வெளியே சென்று திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். அதனை கண்ட அப்பகுதி இளைஞர் ஒருவர் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
அப்போது பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலிசார் இது குறித்து தனி பிரிவு போலீஸ் பிரபுவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அப்போது அவர் இது குறித்து விசாரணை செய்து அவர் பெற்றோர் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் என்று கண்டுபிடித்து அவரை உடனடியாக வரவழைத்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலிசார் அவரது தந்தை ராமுவிடம் அவரது மகனை ஒப்படைத்தனர். காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த அரை மணி நேரத்தில் உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.