போலீஸ் ஸ்டேஷன் முன்பு எம்.எல்.ஏ., மறியல் முயற்சி

சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு எம்.எல்.ஏ., அருள் மறியல் செய்ய முயற்சித்தார்.

Update: 2024-01-20 01:06 GMT

சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு எம்.எல்.ஏ., அருள் மறியல் செய்ய முயற்சித்தார்.

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் 21-வது வார்டு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.4½ லட்சத்தில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம ஆசாமிகள் அந்த குடிநீர் தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி உள்ளனர்.

எனவே குடிநீர் தொட்டியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சூரமங்கலம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அருள் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் சிலர், தண்ணீர் தொட்டியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சூரமங்கலம் போலீஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் தண்ணீர் தொட்டியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து அவர் மறியல் போராட்டத்தை கைவிட்டார். இது குறித்து அவரிடம் கேட்ட போது தண்ணீர் தொட்டியை இடித்தவர்கள் மீது போலீசார் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News