இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் பரப்புரையை எம்எல்ஏ ஈடுபட்டார்
"இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்" பரப்புரை திட்டம் பிரச்சாரத்தை மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி மேற்கொண்டார்.;
Update: 2024-02-29 16:36 GMT
பிரச்சாரம்
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-150, காரம்பாக்கம் முழுவதும் "இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்" பரப்புரை திட்டம் பிரச்சாரத்தை மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி மேற்கொண்டார். திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசவங்களை வழங்கி பரப்புரையில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் வட்ட கழக செயலாளர் சி.சுந்தர், வட்ட கழக நிர்வாகிகள் மு.ஆறுமுகம், ஜெயவேல், அருள், இரா.ரமேஷ், இரா.சீனிவாசன், தில்லைவாணன், அணிகளின் மாவட்ட துணை அமைப்பாளர்கள் மா.பா.சித்ராலயம், அ.ராகேஷ், பகுதி அமைப்பாளர் அ.கவுஸ்பாஷா, க.நரேந்திரன், விஜயகுமார், வினோத், அர்ஜீனன், குட்டி (எ) குருசாமி, ஜனா, ராஜேஷ், அன்பழகன், செல்வதுரை, நித்யானந்தம், ஹரி, ஆனந்தன், சண்முகசுந்தரம், கோபிநாத், ராகுல்கணேஷ் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.