திருவண்ணாமலை : புதிய பள்ளி கட்டட திறப்பு விழாவிற்கு 3 கி.மீ நடந்து சென்ற எம்.எல்.ஏ..!
அரசுப் பள்ளி கூடுதல் கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்க 3 கிலோ மீட்டர் நடந்து சென்ற கலசப்பாக்கம் எம்.எல்.ஏ.;
Update: 2023-12-22 01:01 GMT
நடந்து சென்ற எம்எல்ஏ
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ் செண்பகதோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. இதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த புதிய கட்டட தொடக்கவிழாவிற்கு விருந்தினராக கலசப்பாக்கம் எம்.எல்.ஏ பெ.சு.தி.சரவணணன் அழைக்கப்பட்டிருந்தார். மழை வாழ் மக்கள் வசிக்கும் பகுதி என்பதால், அந்தப் பகுதிக்கு போக்குவரத்து வசதிகள் எதுவும் கிடையாது. இருந்தபோதும், ப எம்.எல்.ஏ சரவணன், காட்டாற்றை கடந்து மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று பள்ளிக்கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையிலும், அழைப்பின் பேரில், நடந்தே சென்று பள்ளி விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏவை மலைவாழ் மக்கள் வெகுவாகப் பாராட்டி நன்றியும் தெரிவித்தனர்.