நத்தத்திற்கு வந்த நகரத்தார் சர்க்கரை காவடி
குன்றக்குடியில் இருந்து 331 சர்க்கரை காவடிகளுடன் 76 ஊர்களை சேர்ந்த பக்கதர்களுடன் புறப்பட்ட நகரத்தார் பழனி பாத யாத்திரை குழுவினர் நேற்று நத்தம் பகுதியை அடைந்தனர்.
Update: 2024-01-22 08:57 GMT
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் வாணியர் பஜனை மடத்திற்கு நேற்று காலை 400 ஆண்டுகள் பாரம்பரியமிக்க நகரத்தார் காவடிகள் வந்து சேர்ந்தனர். 331 சர்க்கரை காவடியுடன் 76 ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் காவடிகள் (ஜன.16) 16-1-2024 அன்று தேவகோட்டை நகரப் பள்ளிக்கூடத்தில் காவடி கட்டி வைத்து பூஜை செய்த பின் அங்கிருந்து கிளம்பி 19-1-2024 அன்று குன்றக்குடியில் ஒன்றிணைந்து காவடிகள் 21 நாட்கள் பயணமாக புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை நத்தம் வாணியர் பஜனை மடத்திற்கு வந்தடைந்தனர்.பின்னர் பானகபூஜை நடைபெற்றது.பின்பு வழி நெடுகிலும் பக்தர்கள், பொதுமக்கள் காவடியை வரவேற்று ஆசி பெற்றனர்.